செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாளை அமெரிக்கா செல்கிறார்.

* "மக்கள் நல சேவகராகக் கடமை ஆற்றுவேன்" என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை வெளியிட்டு "இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம்" என விஜய் உரையாற்றினார்.

* உயர்கல்வி படிக்கும் 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

* சென்னையில் இன்று டேபிள் டென்னிஸ் லீக் போட்டி தொடங்கிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.

* இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது, உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது என்று போலந்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

* பங்குச்சந்தை முறைகேடு புகார் தொடர்பாக சென்னையில் இன்று செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

* மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

* உக்ரைனின் 45 ஆளில்லா விமானங்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின் கூறியுள்ளார்.

* பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இது போருக்கான யுகமல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகள் பாராட்டுக்குரியவை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

* தரம் உயர்த்தப்பட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.


Next Story