செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி நெகிழ்ச்சி.

* தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல்-அமைச்சரின் இணைச் செயலாளராக லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ரக்சா பந்தன் தினத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மதிப்பை உறுதி செய்வோம் என நாட்டிலுள்ள ஆண்மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தி உள்ளார்.

* பெண் டாக்டர் படுகொலைக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

* மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

* பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

* கலைஞருக்கு பாராட்டு மழை பொழிந்த ராஜ்நாத் சிங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

* தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

* வயநாடு நிலச்சரிவு காரணமாக வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இ.எம்.ஐ. பிடித்தம் செய்த வங்கிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


Next Story