செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* வயநாட்டில் உதவி செய்த தமிழக செவிலியர் சபீனாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

* போதைப் பொருட்கள் விற்பனை செய்த 17 ஆயிரம் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* பெண் டாக்டர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நாளை முதல் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய டாக்டர்கள் சங்கம் (போர்டா) அறிவித்துள்ளது.

* ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை என அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.

* முன்னாள் வெளியுறவு துறை மந்திரி நட்வர் சிங் காலமானார்.

* அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

* சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் அமையவுள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

* செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

* தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

* மணிப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார்.

* லண்டனில் ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனையை அமெரிக்க நபர் ஒருவர் முறியடித்தார்.


Next Story