செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* இமாசலபிரதேசத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

* வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

* வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். ராணுவத்தினர் கட்டிய பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

* தலைமை நீதிபதி பதவி விலக வலியுறுத்தி வங்காளதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

* பயணிகள் வசதிக்காக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்களை கொள்முதல் செய்ய மத்திய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

* ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

* பாலஸ்தீனத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில், 100 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

* மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* பள்ளி மாணவர்களின் சண்டையை சாதி சண்டையாக பார்க்க கூடாது என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

* எஸ்.சி., எஸ்.டி பிரிவு இட ஒதுக்கீட்டில் கிரிமீலேயர் கிடையாது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

* வயநாடு நிலச்சரிவு பாதிப்பிற்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது.


Next Story