செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* வெண்கலம் வென்ற ஆக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.

* வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

* டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

* மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார்.

* மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினரைத் திருப்பி அனுப்ப கேரளா அரசு முடிவு செய்தது.

* மாநிலங்களவையில் தங்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

* முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

* ஜனாதிபதி திரவுபதி முா்மு மற்றும் நியூசிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சன் ஆகியோா் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினா்.

* ஒரு மாணவன் கூட திசை மாறாமல் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story