செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்.

* புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

* இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட இரு மீனவர்களும், நடுக்கடலில் உயிரிழந்த மீனவரின் உடலுடன் ராமேஸ்வரம் திரும்பியுள்ளனர்.

* 2040க்குள் சென்னையின் 7 சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும் என அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

* டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் பற்றி சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* இந்த ஆண்டு கோடை வெயிலுக்கு 374 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் மத்திய கிழக்கிற்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.

* தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

* ஹமாஸ் தலைவா் உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

* ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இருப்பதில் பெருமை கொள்வதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.


Next Story