செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

* வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணியில் ராணுவத்துடன் சேர்ந்து இஸ்ரோ கைக்கோர்த்துள்ளது.

* அமெரிக்கா, ரஷியா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

* இந்திய பங்கு சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

* புதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

* திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

* ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதியை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது அதிரடி ராக்கெட் தாக்குதலை ஹிஜ்புல்லா அமைப்பினர் மேற்கொண்டனர்.

* திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய போவதாக ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சி.பி.ஐ. 13 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.


Next Story