செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக உயர்ந்துள்ளது. 3வது நாளாக மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

* நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா கேரளா வந்தடைந்தனர்.

* இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் என ஈரான் தலைவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

* நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பார்வையிட்டார்.

* அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

* இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

* பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு இந்திய வீரர் பிரனாய் முன்னேறியுள்ளார்.

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெய்க்வாட் காலமானார்.

* ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story