செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திரபிரதானையும் கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.

* டிரம்பை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டுவதாக அமெரிக்காவுக்கு உளவு தகவல் கிடைத்துள்ளது.

* ஓமன் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது.

* தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். 350 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

* முஸ்லிம் சமுகம் பற்றி அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

* காங்கோவில் போராட்டக்காரர்கள் தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.

* மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் அபார வெற்றி

* எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

* ரேஷன் கார்டு வழங்க வெளிமாநில தொழிலாளர்கள் சரிபார்ப்பு பணிக்கு 1 மாதம் 'கெடு' - மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story