செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* பிரதமர் மோடி இன்று ரஷியா சென்றார். அங்கு அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

* நீட் தேர்வு தொடர்பான வழக்கை வியாழக்கிழமைக்கு சுப்ரீம்கோர்ட்டு ஒத்திவைத்தது. வினாத்தாள் கசிந்தது உறுதியாகி இருப்பது குறித்து தெரிவித்த சுப்ரீம்கோர்ட்டு மறுதேர்வுக்கு உத்தரவிட தயங்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.

* சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். அந்த பதவியில் அருண் நியமிக்கப்பட்டு உள்ளார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.

* தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

* அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. பின்னர் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மக்களையும் அவர் சந்தித்தார்.

* அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

* இந்தோனேசியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், சட்ட விரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

* இந்திய எல்லைக்குள் சீனா ராணுவ தளம் கட்டி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

* சந்தேஷ்காளி விவகாரம்.. மேற்கு வங்காள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

* அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, 19 பேர் படுகாயமடைந்தனர்.

* 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ அறிவித்தது. தற்போது யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது.

* பாகிஸ்தான் பங்கு சந்தை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story