செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சியில் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று குறிப்பிட்டார்.

* சாலை மோசமாக இருந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது என்று நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

* இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு.. அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை

* அதிமுக உண்ணாவிராத போராட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

* டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி

* ரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

* கென்யாவில் இருந்து வந்த பெண்ணிடம் ரூ.22 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் 79 ஆயிரம் புள்ளிகளாக உயர்வடைந்து உள்ளது.


Next Story