செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

* தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

*சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டசபையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

* நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்று அசத்தியுள்ளன.

* ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன் செங்கடலில் கப்பல் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

* விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

* ரஷியாவில் மதவழிபாட்டு தலங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

* ஊக்கமருந்து சர்ச்சை: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ருமேனியாவை வீழ்த்தி பெல்ஜியம் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.


Next Story