செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* தமிழகத்தையே உலுக்கிய விஷ சாராய விவகாரம்: 57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: மேலும் 20 பேர் கவலைக்கிடம்.

* ஏரல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார்.

* பிரஜ்வல் ரேவண்ணாவை தொடர்ந்து சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி. மீது ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர் ஓரின சேர்க்கை புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சூரஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

* மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மோசமான செயல்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: துருக்கி அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி பெற்றது.

* கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: தேடப்பட்டு வந்த முக்கிய நபரை சென்னையில் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

* சுவிட்சர்லாந்தில் இந்துஜா குடும்பத்தினர் இந்திய தொழிலாளர்களை பூட்டிய அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

* சூப்பர் 8 சுற்று : 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

* நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமாரை நேற்று திடீரென்று மத்திய அரசு நீக்கியது.

* 10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால் அரைநாள் விடுப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'

* அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆந்திராவைச் சேர்ந்தவர் உயிரிழந்தார்.


Next Story