செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்றும் அ.தி.மு.க.வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

* த.வெ.க. தலைவர் விஜய்க்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி,. தினகரன்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* சூப்பர் 8 சுற்று: ஹோப் அதிரடி... அமெரிக்காவை எளிதில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

* கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

* மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் பதவியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.

* வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாள் பயணமாக இந்தியா வந்தார்.

* அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

* ஐ.நா. சபைக்கான சிறந்த உருவகமாக யோகா திகழ்கிறது என ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

* டெல்லிக்கு உரிய தண்ணீரை வழங்கக்கோரி ஆம் ஆத்மி பெண் மந்திரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

* கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து - பிரான்ஸ் ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

* கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை 7 தேர்வு மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.


Next Story