செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார்.

* கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது விஷசாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்தார்.

* விஷ சாராய உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக , பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டன.

* நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

* கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

* 'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

* மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீனை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது. வாதாட தங்களுக்கு போதிய வாய்ப்பு தரவில்லை என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை கோர்ட்டு எடுத்து உள்ளது.

* கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவத்தை தொடர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

* கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து சிகிச்சையில் உள்ளவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

* டி20 உலககோப்பை-மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; டி.எல்.எஸ். விதிப்படி வங்காளதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இத்தாலி அணியை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது.


Next Story