செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்தில் இருந்த 65 சதவீதமாக உயர்த்தி பீகார் அரசு கொண்டுவந்த சட்டத்தை ரத்து செய்து அம்மாநில ஐகோர்ட்டு இன்று உத்தரவிட்டது.

* ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

*இன்று பிறந்த நாள் கொண்டாடிய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* விஷ சாராய விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல் அமைச்சர் பதவி விலக வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். விஷசாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

* ஜம்மு காஷ்மீரில் ரூ.1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அங்கு நாளை நடைபெறும் யோகா தினவிழாவிலும் பங்கேற்கிறார்.

* 'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து நாளை மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடக்கிறது.

* டி20 உலகக்கோப்பை: 'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இன்று மோதுகிறது.

* சூப்பர் 8 சுற்று: சால்ட், பேர்ஸ்டோவ் அதிரடி..வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.


Next Story