புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x

புதிய ரேஷன் கடை திறப்பு

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ், கீழ்வேளூர் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) பன்னீர் செல்வம், ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழ்வேளூர் பேரூராட்சி சந்தை தோப்பு பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் குகன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொது மேலாளர் காளிதாஸ் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story