புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது: சபாநாயகர் அப்பாவு


புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது: சபாநாயகர் அப்பாவு
x

அரசியலுக்கு வயது தடை இல்லை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக நிதி வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு பின்னர் இது புதிய கல்விக்கொள்கை என பெயர் மாற்றப்பட்டது. பெயர் மாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்வி வளர்ச்சிக்காக தமிழகத்திற்கு சரியாக நிதி ஒதுக்குவது இல்லை. இதற்கு காரணம், புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு சொல்கிறது.

புதிய கல்விக் கொள்கையின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக படிக்க வலியுறுத்துகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சாமானிய மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. இதனால் நாங்கள் அதை எதிர்க்கிறோம்.

நடிகர் ரஜினிகாந்த் வயதானவர் என்றாலும் இளமையாக நடித்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் கருத்துகளை சொல்லி கொண்டே இருக்க வேண்டும். வயதாக வயதாக பழுத்த பழம்போல் கலைஞர் போன்று அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும். அரசியலுக்கு வயது தடை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story