தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் நெமிலி ஒன்றியம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்
தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் நெமிலுி ஒன்றியம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ஒன்றிய குழு தலைவர் அறிவுறுத்தினார்.
ராணிப்பேட்டை,
தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் நெமிலுி ஒன்றியம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ஒன்றிய குழு தலைவர் அறிவுறுத்தினார்.
நெமிலி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பனப்பாக்கம், ரெட்டிவலம் பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் நெமிலி ஒன்றியம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், வேதமுத்து மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.