அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு


அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை

மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு வருகிற 7-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வை எழுதும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். 100 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர் அறிவியல் ஆய்வகத்தில் ஆன்லைன் மூலம் தற்போது பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தேர்வு பயத்தை போக்கும் வகையிலும், இதற்கு முன்பு 'நீட்' தேர்வுகளில் கேள்விகள் எந்த அடிப்படையில் கேட்கப்பட்டது என்பதை மாதிரியாக கொண்டு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 21-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 6-ந் தேதி வரை இத்தேர்வு நடைபெறும்'' என்றார்.


Next Story