பட்டிவீரன்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்


பட்டிவீரன்பட்டி அருகே  32 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்
x

பட்டிவீரன்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியது.

திண்டுக்கல்
பட்டிவீரன்பட்டி அருகே தேவரப்பன்பட்டியில் கவுண்டர் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு அய்யம்பாளையம் மருதாநதி அணை தெற்கு வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் நீராதாரமாகும். பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால், தெற்கு வாய்க்காலில் தண்ணீர் வரும் வாய்க்கால் தூர்ந்து போய் விட்டது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இந்தநிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமியிடம் தேவரப்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெற்கு வாய்க்காலை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, தற்போது தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.


இந்த தண்ணீர் மூலம் சுமார் 32 ஆண்டுகளுக்கு பின்பு தேவரப்பன்பட்டியில் உள்ள கவுண்டர்குளம் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக குளம் நிரம்பியதையடுத்து தேவரப்பன்பட்டி ஊராட்சி தலைவர் ரேவதி மாரிமுத்து, துணைத்தலைவர் பிரித்விராஜ், அய்யம்பாளையம் தி.மு.க. நகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் குளத்தில் மலர்தூவினர்.



Next Story