நவசக்தி சாரதாதேவி கோவில் குடமுழுக்கு


நவசக்தி சாரதாதேவி கோவில் குடமுழுக்கு
x

மயிலாடுதுறையில் நவசக்தி சாரதாதேவி கோவில் குடமுழுக்கு நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கூறைநாடு நவசக்தி சாரதாதேவி கோவிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடந்தது. விழாவையொட்டி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தனபூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கும்ப அலங்காரம் நடந்தது. இதனை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதியுடன் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து மூலஸ்தான அம்பாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி தென்பாதியில் சீரடி சாய்பாபா கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்ப அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.


Next Story