நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா


நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா
x

பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி வேளியநல்லூர் கிராமத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சண்முகம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் ஜீவரத்தினம் ஆகியோர்தொடங்கி வைத்தனர்.

முகாமில் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், கோவில்களில் உழவாரபணி, மரம் நடுதல், பனை விதைகள் நடுதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றது.

முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் கோபால், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோபி மற்றும் கோபால் ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.


Next Story