பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டம்


பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டம்
x

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள ஜெயா பப்ளிக் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி (சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்) தேசிய ஒருமைப்பாட்டு ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்

இதற்கு ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் தலைமை தாங்கி தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜெயா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம் திருநின்றவூர் காந்தி சிலை வரை 2½ கிலோ மீட்டர் சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தனர். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் காந்தி சிலை அருகே தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாசகங்களையும் பதாகைகளையும் மாணவர்கள் ஏந்தி ஓட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டத்தின் போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் வேடமிட்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஜெயா பப்ளிக் பள்ளியின் முதல்வர் ராஜன், இயக்குனர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story