ஆயுள் தண்டனையை எதிர்த்து நாகர்கோவில் காசி மேல்முறையீடு- சி.பி.சி.ஐ.டி. பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆயுள் தண்டனையை எதிர்த்து நாகர்கோவில் காசி மேல்முறையீடு- சி.பி.சி.ஐ.டி. பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஆயுள் தண்டனையை எதிர்த்து நாகர்கோவில் காசி மேல்முறையீடு- சி.பி.சி.ஐ.டி. பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. இவர் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோ, புகைப்படங்களை எடுத்து உள்ளார். அவற்றை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பெண்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, காசியை 2020-ம் ஆண்டில் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இவரது லேப்டாப்பில் இருந்த 1,900 ஆபாச படங்கள், 410 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகளிர் சிறப்பு கோர்ட்டு, காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி காசி, மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Next Story