நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் ரெயில் நிலையம் மாற்றம்


நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் ரெயில் நிலையம் மாற்றம்
x

பெங்களூருவில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் ரெயில் நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சூரமங்கலம்:-

தர்மபுரி, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17235), கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது, இதேபோல் நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17236) கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த ரெயில்கள், பெங்களூருவில் இருந்து புறப்படும் ரெயில் நிலையம் மாற்றப்பட்டு உள்ளது. குறிப்பாக பெங்களூருவில் உள்ள பையப்பனஅள்ளியில் அமைந்துள்ள சர்மோக்ச குண்டம் விஸ்வேஸ்வராய டெர்மினல் ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி பெங்களூரு-நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17235) வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெங்களூரு பையப்பனஅள்ளியில் உள்ள சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வராய ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல் நாகர்கோவில்-பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-17236) வருகிற 3-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பெங்களூரு பையப்பனஅள்ளியில் உள்ள சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வராய டெர்மினல் ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயில் கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையம் வரை இயக்கப்படாது.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story