என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சி தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி பணியாளர்கள்-தூய்மை பணியாளர்கள் இணைந்து நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவுவோம், என் குப்பை என் பொறுப்பு என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் குப்பைகளை சாலையில் கொட்ட கூடாது, குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும், குப்பைகளை வீதியில் கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினர். பின்னர் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. இதில் நகரமன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story