முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்


முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 6:45 PM GMT)

தியாகதுருகம் அருகே முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட கொ.பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து கடந்த கும்பாபிஷேக விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 30-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 7-ந் தேதி யாகசாலை பிரவேசம், மண்டல ஆராதனையுடன் முதல் கால யாக பூஜை, 8-ந் தேதி 2-வது கால யாக பூஜை, 3-வது கால யாக பூஜை, நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியுடன் 4-வது கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் காலை 10 மணியளவில் யாகசாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க புனித நீ்ர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரகலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோவில், முருகன் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், ஆகாச கருப்புசாமி கோவில் ஆகிய கோவில்களின் கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் மூலவர் முனியப்பன் சாமி உள்ளிட்ட சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும், ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கண்ணன், தியாகதுருகம் மேற்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன் மற்றும் கண்டாச்சிமங்கலம், விருகாவூர், நாகலூர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story