நாடியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்


நாடியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
x

நாடியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாடு அருகே கீழாத்தூரில், நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முளைப்பாரி விழா நடந்தது. இதையொட்டி விரதமிருந்த பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் 9 வகையான நவதானியங்கள் மூலமாக வளர்ந்து இருந்த முளைப்பாரிகளை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் அருகே உள்ள பிள்ளையார் ஊரணி குளத்தில் முளைப்பாரியை விட்டனர். இதையடுத்து அவர்கள் சாதி தரிசனம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story