ஆயில்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு


ஆயில்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 9:09 AM GMT)

ஆயில்பட்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் தாலுகா தாண்டாக் கவுண்டம்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தமிழரசி (28). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் ஆத்தூர்-ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக அவரது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி அவரது மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story