விரைவில் அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


விரைவில் அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

தொழில் முதலீடுகளை ஈர்க்க மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் தனது பதிலுரையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது ,

ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2100 கோடி கடன் வழங்கப்படும்.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்க்க மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். என தெரிவித்தார்.


Next Story