நடிகர் அஜித்குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்; திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி


நடிகர் அஜித்குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும்; திருச்சியில் அர்ஜூன் சம்பத் பேட்டி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 17 Aug 2023 8:09 PM GMT (Updated: 18 Aug 2023 10:26 AM GMT)

நடிகர் அஜித்குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருச்சியில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்புள்ள தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் திருச்சி கோர்ட்டில் நேற்று ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டத்துக்கு புறம்பாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பெரியார் சிலை அமைத்துள்ளனர். தி.மு.க. அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோன்று திராவிட சித்தாந்தங்களை பரப்பும் வகையில் சிலை அமைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும். திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தவிருக்கும் 'வள்ளலார் 200 வைக்கம் 100' என்ற விழாவுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். வள்ளலார், நாத்திகம் பேசினார் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தயாராக இருக்கிறேன். நடிகர் அஜித்குமார் குறித்து, தி.மு.க. மூத்த தலைவரான அமைச்சர் துரைமுருகன் அவதூறாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர், உடனடியாக அஜித்குமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கருணாநிதி காலத்தில் இருந்தே தி.மு.க.வினர் அஜித்குமார் மீது வன்மத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story