மினி டைடல் பூங்காவால் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்


மினி டைடல் பூங்காவால் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்ட மினி டைடல் பூங்காவால் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

தஞ்சாவூர்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்ட மினி டைடல் பூங்காவால் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சை பிள்ளையார்பட்டி மேலவஸ்தாசாவடியில் 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து டைடல் பூங்கா அமைக்க அதற்கான அடிக்கால் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக தஞ்சை பிள்ளையார்பட்டி மேலவஸ்தாசாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராடசி ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

வேலைவாய்ப்பு

பின்னர் இவர்கள், மினி டைடல் பூங்கா அமைய உள்ள இடத்தை வரைபடத்துடன் பார்வையிட்டனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சையில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் தஞ்சை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், அவர்கள் சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும் என்றார்.


Next Story