சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி


சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 27 Nov 2022 6:30 PM GMT (Updated: 27 Nov 2022 6:31 PM GMT)

சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் இ.எஸ்.கார்டன், எல்லிஸ்சத்திரம் சாலை மற்றும் புதிய பஸ்நிலையம் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு நூற்றாண்டு விழா ஜோதி நாளை மறுநாள்(புதன்கிழமை) நடைபெற உள்ள நிறைவு விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பின்னர் கலெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறுகையில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நூற்றாண்டு விழா ஜோதி சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஜோதி அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி நூற்றாண்டு விழா ஜோதி விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை மறுநாள் வருவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், மினி மாரத்தான் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story