பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:45 PM GMT)

சாணார்பட்டி அருகே பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பசும்பால், எருமை பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு தலா ரூ.10 உயர்த்த வேண்டும், பள்ளி சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் பால் வழங்க வேண்டும், கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், துணைச் செயலாளர் வெள்ளை கண்ணன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்துகொண்டனர்.





Next Story