நள்ளிரவில் பரபரப்பு: தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்தது
நள்ளிரவில் பரபரப்பு: தறிகெட்டு ஓடிய கார் வீட்டுக்குள் புகுந்தது; தூங்கிக்கொண்டிருந்த 3 பெண்கள் படுகாயம்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சொகுசு கார் ஒன்று சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆதிவராகநத்தம் பகுதியில் வந்தபோது எதிரே வாகனம் வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், சாலையோரம் உள்ள வெங்கடேசன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்து நின்றது.
கார் மோதிய வேகத்தில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மேலும், மேற்கூரை பெயர்ந்து ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசனின் தாய் அம்மாவாசை(வயது 50), மனைவி தில்லை கலையரசி(24), அக்காள் மகள் பிரவீனா(18) ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். காருக்குள் இருந்தவர்களும் லேசான காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story