தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை - மத்திய மந்திரி தகவல்


தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு  மருத்துவ காப்பீட்டு அட்டை - மத்திய மந்திரி தகவல்
x

தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கியதாக மத்திய மந்திரி கூறினார்.

மதுரை


மதுரை மடீட்சியா அரங்கில் பிரதமர் மோடியின் ரோஷ்கார் மேளா மற்றும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அரசு பணி நியமன ஆணை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் பங்கேற்று தென் மாவட்டங்களை சேர்ந்த 229 பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவன பணி நியமன ஆணைகள் வழங்கினார். மேலும் பொதுமக்கள் 50 பேருக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறும் போது தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார். விழாவில் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா சுசீந்திரன், மதுரை மாநகர், மாவட்ட பொருளாளர் சத்யம் செந்தில்குமார், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ஹனுமந்த் ராவ் உள்பட பலர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story