மருத்துவ ஆலோசனை சிறப்பு கருத்தரங்கம்


மருத்துவ ஆலோசனை சிறப்பு கருத்தரங்கம்
x

பெரம்பலூரில் மருத்துவ ஆலோசனை சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் பாரம்பரிய அரிமா சங்கம் சார்பில் ஆரோக்கியமே அற்புத வாழ்வு என்ற தலைப்பில் டாக்டர்களின் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் கருத்தரங்க நிகழ்ச்சி முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். சாசனத்தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். இதில் உடலை சீராக பராமரிப்பதின் அவசியம், தொடர் பழக்கங்களை உருவாக்கும் மது, புகை, போதை போன்ற பொருட்களை தவிர்ப்பதின் அவசியம், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பொதுநல மருத்துவர் ராஜசேகரன் பேசினார். அறுவை சிகிச்சை நிபுணர் செங்குட்டுவன் குடற்புண் ஏற்பட்டால், அவற்றை சரிசெய்யும் மருத்துவமுறைகள் குறித்தும், குடலிறக்கம் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவ நிபுணர் பொன்னையா செந்தில்குமார், குறட்டை, காதுவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான மருத்துவ தீர்வுகள் குறித்தும், கண் மருத்துவ நிபுணர் புவனேஸ்வரி, செல்போன், டி.வி., கணினி ஆகியவற்றை தொடர்ச்சியாக பார்க்கும் போது ஏற்படும் பார்வைத்திறன் பாதிப்புகள், அவற்றை சரிசெய்வது குறித்தும், பல் சீரமைப்பு சிறப்பு நிபுணர் கரிகாலன், பற்களை சுத்தமான வைத்திருக்க வேண்டியதின் அவசியம், சொத்தை பற்கள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், தோல்நோய் சிறப்பு நிபுணர் இளங்கோவன் பூஞ்சை, தேமல், மரு உள்ளிட்ட தோல்நோய்கள் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், தடுப்பதற்கான குறித்தும், மருத்துவ குறிப்புகளை விளக்கி பேசினார்கள். இதையடுத்து, அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மருத்துவ சந்தேகங்களுக்கு டாக்டர்கள் பதில் அளித்தனர்.

கருத்தரங்கத்தை இயற்கை சூழலியல் பொறியாளர் சிவராஜ் தொகுத்து அளித்தார். கருத்தரங்க ஏற்பாடுகளை துணைத்தலைவர் முரளிதரன், சேவைத்திட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், பொருளாளர் ராஜேஷ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதேபோன்ற மருத்துவ கருத்தரங்கம் மே மாதத்தில் மீண்டும் நடத்தப்படும் என்று சங்க தலைவர் தெரிவித்தார். முடிவில் நிர்வாக செயலாளர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.


Next Story