மதுரையில் இன்று ம.தி.மு.க. மாநாடு- வைகோ பேசுகிறார்


மதுரையில் இன்று ம.தி.மு.க. மாநாடு- வைகோ பேசுகிறார்
x

மதுரையில் ம.தி.மு.க. மாநாடு இன்று நடக்கிறது. இதில் வைகோ பேசுகிறார்.

மதுரை

மதுரையில் ம.தி.மு.க. மாநாடு இன்று நடக்கிறது. இதில் வைகோ பேசுகிறார்.

ம.தி.மு.க. மாநாடு

மதுரை வலையங்குளத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்த மாநாட்டில், மாநிலம் முழுவதும் இருந்து ம.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. ேநற்று இரவில் மாநாட்டு ஏற்பாடுகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

வைகோ

மாநாட்டின் தொடக்கமாக மாலை 4 மணிக்கு கட்சி கொடி ஏற்றப்படுகிறது. அதன்பின்னர், திராவிட இயக்க சுடர் ஏற்றப்பட்டு, அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் திறக்கப்படுகின்றன.

இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூகநீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுய ஆட்சி, அண்ணா ஏற்றிய அறிவுசுடர், நாடாளுமன்றத்தில் வைகோ உள்ளிட்ட தலைப்புகளில் பலர் பேசுகின்றனர். நிறைவுரையாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முடிவில், மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி நன்றி கூறுகிறார்.


Related Tags :
Next Story