மயிலாடுதுறை: வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஒரு மணி நேர கடையடைப்பு போராட்டம்


மயிலாடுதுறை: வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஒரு மணி நேர கடையடைப்பு போராட்டம்
x

மயிலாடுதுறையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேர கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை,

வணிக நிறுவனங்கள் வணிக வரித்துறையினர் நுழைந்து டெஸ்ட் பர்சேஸ், வாகன சுற்றாய்வு தணிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒரு மணி நேர கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன்படி மயிலாடுதுறையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மயிலாடுதுறை வணிக வரி அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று, தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதையடுத்து ஒரு மணி நேர கடையடைப்புக்கு பின்னர், கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறக்கப்பட்டன.


Next Story