தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்:பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள்:பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை


தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நினைவு நாள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இ்மானுவேல் சேகரன் நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்படுகிறது. இதில், மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். இதனையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீவிர ரோந்து

குறிப்பாக, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு செல்பவர்கள், மதுரை வழியாகச் செல்வார்கள் என்பதால் மதுரை மாநகர காவல்துறை சார்பில் முக்கியச்சாலைகள் மற்றும் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்பகுதிகளில் நேற்று இரவு முதல் 24 மணி நேர தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சோதனை சாவடி

மாநகர போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் புறநகர் பகுதிகளில், ராமநாதபுரம் சாலையில் உள்ள சிலைமான் பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூர் வரை வழிநெடுகிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் நெடுஞ்சாலை மற்றும் சிலைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் 24 மணி நேர வாகன ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் சோதனைச்சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் சந்தேகத்துக்குரிய வாகனங்களில் போலீசார் சோதனையிடவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Related Tags :
Next Story