மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்


மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்
x

மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

மயிலாடுதுறை

10,12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10, 12-ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் வழிமுறையை தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு கொண்டு வந்தது. பதிவை மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும். கடந்த ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்கவில்லை என்பது தெரியவந்தது. அதனால் தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கியது. நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

பதிவு செய்யும் முறை நிறுத்தம்

இந்தநிலையில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவுசெய்யும் நடைமுறை 2021- 2022-ம் கல்வியாண்டு முதல் நிகழ்நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுசெய்யும் முறை நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை பெறலாம்.

இணையதளத்தில்

எனவே மாணவர்கள் தாங்களாகவே 2-வது குறுக்குதெரு, பாலாஜி நகர், பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-609001 என்ற முகவரியில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இணையவழியாகவோஅல்லது இ-சேவைமையம் வாயிலாகவோ அல்லது தங்களது கைபேசி வாயிலாகவோ அல்லது கணினி மையங்களிலோ புதிய பதிவு, புதுப்பித்தல், கல்வித்தகுதியை சேர்த்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு 04364-299790 என்ற மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மைய அலுவலகதொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story