மினி மாரத்தான் போட்டி


மினி மாரத்தான் போட்டி
x

பெரியபட்டினத்தில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

பெரியபட்டினத்தில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.

மாரத்தான்

பெரியபட்டினம் நகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற மக்கள் சங்கமம் மாநாடு ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ந் தேதிகளில் பெரியபட்டினம் தர்கா திடலில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மாரத்தான் போட்டியை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயலாளர் முகமது ரசின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முத்துப்பேட்டை, சேதுநகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டிணம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பரிசு

போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 103 பேர் முழு தூரத்தையும் ஓடி நிறைவு செய்தனர். மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை ஆசிப், 2-வது இடத்தை யூசுப், 3-வது இடத்தை மைதீன் ஆகியோர் பெற்றனர்.

இந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஓட்டப்பந்தயம்

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கான கிராத் போட்டி, ஓவியப்போட்டி, வரலாற்றுச் சின்னங்களை தயாரித்துக் கொடுக்கும் போட்டி, வினாடி-வினா போட்டி, குழந்தை களுக்கான ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியை மாநில செயலாளர் ரசீன் தொடங்கி வைத்தார். எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ரியாஸ்கான், மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் சலீம், லாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை ஆலிம்கள் அப்துல் ஜாபர், முகமது இபுராகிம், ஹபீபுர் ரகுமான், அப்துர் ரகீம் ஆகியோர் நடத்தினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story