தடை விதிக்கப்பட்ட ஆலைகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி?


தடை விதிக்கப்பட்ட ஆலைகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி?
x

தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட ஆலைகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட ஆலைகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தடை

விருதுநகர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

ஏற்கனவே தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது கடைசி நேரத்தில் வடமாநிலங்களில் அதிகளவில் பட்டாசு தேவை இருக்கும் என்ற எண்ணத்தில் இங்குள்ள ஆலை நிர்வாகத்தினர் பட்டாசுகளை தயாரித்து வருகிறார்கள். இதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து மற்றும் விதிமீறல்கள் காரணமாக மாவட்டம் முழுவதும் 66 பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டாசு உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

விதி மீறல்கள்

மத்திய வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து தவறுகளை சரி செய்து விட்டதாக கூறி சிலர் தங்களது பட்டாசு ஆலைகளை அனுமதியின்றி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

சிவகாசி தாலுகாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலை இதுபோன்ற விதிமீறல்கள் காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில் ஆலையில் தற்போது உற்பத்தி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற விதி மீறல்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

தற்காலிக தடை விதிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளின் பட்டியலை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை பெற வேண்டும்.

அவ்வாறு உற்பத்திக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆலையின் நிர்வாகத்தினர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story