மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்பத்திருவிழா முன்னேற்பாடு பணிகள்


மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்பத்திருவிழா முன்னேற்பாடு பணிகள்
x

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்பத்திருவிழா முன்னேற்பாடு பணிகள்

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனி தெப்போற்சவ திருவிழா கடந்த 5-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நாளை(புதன்கிழமை) ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. விழாவையொட்டி மையமண்டபத்தில் உள்ள கோவில் மற்றும் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்த பணியை நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி துணைத்தலைவர் கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story