தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் 33பேர் காயம்


தேவகோட்டை அருகே  கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் 33பேர் காயம்
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

தேவகோட்டைதேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை

தேவகோட்டைதேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

தேவகோட்டை அருகே உள்ள கோட்டூரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி செவ்வாய் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி கிராமத்தார்கள் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக இக்கோவில் திருவிழா கடந்த 27-ந்தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து முளைப்பாரி இடுதல், திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழா, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே உள்ள வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக அதன் உரிமையாளர்கள் காளைகளை கொண்டு வந்து ஆங்காங்கே அவிழ்த்து விட்டனர்.

33 பேர் காயம்

அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் பிடிப்பட்டது. சில காளைகள் பிடிபடாமல் தப்பி சென்றது. அதன் பின்னர் மதியம் 3 மணிக்கு கிராமத்தார்கள் வேட்டி, துண்டுடன் மேள தாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கோவில் காளைக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

இதை அங்கிருந்த மாடு பிடி வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள் பிடிப்பட்டது. சில காளைகள் அவர்களிடம் பிடிபடாமல் சென்றது. காளைகள் முட்டியதில் 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். 4 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மற்றும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி வீடுகள் தோறும் விருந்து உபசாரம் நிகழ்ச்சியும், கிராமம் முழுவதும் தண்ணீர் பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் சின்னகோட்டூர் சரவணன் அம்பலம், தாணிச்சா ஊரணி பாண்டி அம்பலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story