ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 27 பள்ளி மாணவர் விடுதிகளும், 8 பள்ளி மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 35 பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. 2023-24-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்ய விடுதி மேலாண்மை அமைப்பு என்ற செயலியின் மூலம் இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது. இணையதளத்தில் மாணவ, மாணவிகள் பள்ளி விடுதிகளில் சேர வருகிற 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story