பக்ரீத்திற்கு மறுநாள் பொது விடுமுறை அளியுங்கள் - நவாஸ்கனி எம்.பி கோரிக்கை


பக்ரீத்திற்கு மறுநாள் பொது விடுமுறை அளியுங்கள் - நவாஸ்கனி எம்.பி கோரிக்கை
x

பக்ரீத்திற்கு மறுநாள் பொது விடுமுறை அளிக்க கோரி ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, தமிழக முதல்-அமைச்சருக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வருகிற10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பெரும்பான்மையானோர் வெளிஊர்களுக்கும்,சொந்த ஊர்களுக்கும் சென்று கொண்டாடுபவர்களாக இருக்கின்றார்கள்.

வெளியூர்களுக்கு செல்பவர்கள் திரும்பும் வகையில் மறுநாளான 11-ம் தேதி (திங்கள்கிழமை) அன்றும் பள்ளி, கல்லூரி உட்பட பொது விடுமுறை அளித்தால் சிரமமின்றி பெற்றோர்களும், மாணவர்களும் திரும்புவதற்கு வசதியாக அமையும். எனவே 11-ம் தேதியும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story