மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்


மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)

மலைக்கோட்டாலம் மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தில் ஸ்ரீமதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் முதல் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹிதி மற்றும் மஹாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் சாமிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பி.கே.முரளி, ஒன்றிய கவுன்சிலர் ரூபாமுரளி, ஊராட்சி மன்ற தலைவர் கவிமொழி ராஜாராம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரியா பழனிசாமி, சோலைமுத்து, கொடியரசி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story