லாரி மோதி தொழிலாளி பலி


லாரி மோதி தொழிலாளி பலி
x

தஞ்சை அருகே லாரி மோதி தொழிலாளி இறந்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள வல்லம்புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த லாரி செல்வம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story